செய்திகள் வணிகம்
டாலரை வீழ்த்திய ரிங்கிட்: 8 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
கோலாலம்பூர்:
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில், மலேசிய ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு பொருளாதார தரவுகள் வலுவாக இருப்பதும், அமெரிக்காவின் வளர்ச்சி எதிர்பார்ப்புகள் குறைவாக இருப்பதும் இந்த உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, வாஷிங்டனின் வரி கொள்கை தொடர்பான புதிய அனிச்சயங்கள் சந்தையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
காலை 8 மணிக்கு, ரிங்கிட் டாலருக்கு எதிராக 3.8835/9065 என்ற நிலைக்கு உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்த வர்த்தகத்தில் இது 3.8995/9055 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 1.4 சதவீதமாக மந்தமடைந்துள்ளது என்றும், பணவீக்கம் 2 சதவீத இலக்கிற்கு மேல் தொடர்வதாகவும் மலேசிய முவாமாலாட் வங்கி நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மது அஃப்சனிசாம் அப்துல் ரஷீத் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க இறக்குமதி வரிகள் மீண்டும் வர்த்தகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) கீழ், உலகளாவிய வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு அரசியல் சட்ட அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
"பிற சட்டங்களைப் பயன்படுத்தி வரிகளை விதிக்க டிரம்ப் உறுதியாக உள்ளார். அதே நேரத்தில், சில வர்த்தக நாடுகள் அமெரிக்காவுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களின் ஒப்புதலை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளன.
மேலும், அமெரிக்காவில் அதிகாரப் பிரிவு அமைப்பு தொடர்வதால், பொருளாதாரத்தில் சமநிலையும் நியாயமும் நிலைநாட்ட கண்காணிப்பும் கட்டுப்பாட்டு அமைப்புகளும் உள்ளன என்பதில் நம்பிக்கை அளிக்கிறது," என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை, நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, உலகளாவிய வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்போவதாக டிரம்ப் அறிவித்தார்.
வர்த்தக தொடக்கத்தில், ரிங்கிட் முக்கிய உலக நாணயங்களுடன் ஒப்பிடும்போது சற்றுக் குறைந்த நிலைக்குச் சென்றது.
ஜப்பான் யென்னுடன் ஒப்பிடுகையில், ரிங்கிட் 2.5162/5314 ஆக குறைந்தது (முன்பு: 2.5092/5132). பவுண்டுடன் 5.2540/2851 ஆகவும் (முன்பு: 5.2511/2591), யூரோவுடன் 4.5946/6218 ஆகவும் (முன்பு: 4.5882/5952) குறைந்தது.
ஆனால், ஆசியான் நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடுகையில், ரிங்கிட் பெரும்பாலும் உயர்வாக இருந்தது.
சிங்கப்பூர் டாலருடன் 3.0712/0899 ஆக உயர்ந்தது (முன்பு: 3.0724/0774), இந்தோனேசிய ரூபியாவுடன் 229.9/231.4 ஆக உயர்ந்தது (முன்பு: 230.8/231.3), பிலிப்பைன்ஸ் பேசோவுடன் 6.68/6.72 ஆக உயர்ந்தது (முன்பு: 6.70/6.72).
எனினும், தாய்லாந்து பாட்டுடன் ஒப்பிடுகையில், ரிங்கிட் 12.5201/6024 ஆக குறைந்தது (முன்பு: 12.4952/5216).
ஒரு ரிங்கிட் 23.32 காசாக இந்திய ரூபாய்க்கு எதிராக விற்பனை செய்யப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
