செய்திகள் வணிகம்
ரிங்கிட் வலிமையால் இறக்குமதி பொருட்களின் விலை குறைந்துள்ளது
கோலாலம்பூர்:
ரிங்கிட் மதிப்பு வலுப்பெறத் தொடங்கியுள்ள நிலையில், மக்களின் வாழ்வுச் செலவில் நேர்மறை தாக்கம் உருவாகி வருவதாக மலேசிய மத்திய வங்கியின் ஆளுநர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத் கஃபூர் தெரிவித்தார்.
குறிப்பாக, சில இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதற்கான தரவுகளை அவர் முன்வைத்தார்.
உள்நாட்டு வர்த்தக அமைச்சகத்தை நிர்வகிக்கும் பிரைஸ் கேச்சர் தரவுகளை மேற்கோள் காட்டிய அவர், விலை குறைவு படிப்படியாகத் தோன்றத் தொடங்கியுள்ளதாக கூறினார். இதை பொதுமக்கள் தாங்களே சரிபார்க்க முடியும் என்றும் விளக்கினார்.
உதாரணமாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை, 2025 தொடக்கத்தில் கிலோ ஒன்றுக்கு 5.20 ரிங்கிட் இருந்த நிலையில், சமீபத்திய கணக்கில் 4.00 ரிங்கிட் ஆக குறைந்துள்ளது.
மேலும், விலை ஒப்பீட்டுக்கான இந்த பயன்பாட்டை மக்கள் அதிகமாக பயன்படுத்தி, சாமர்த்தியமாக பொருட்களை வாங்கும் முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். சந்தை விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்கும் கடைகளைக் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பயனாளர்களும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ரிங்கிட் வலுப்பெறும் பயன் முழுமையாக மக்களிடம் சென்றடையும் என அப்துல் ரஷீத் வலியுறுத்தினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
