செய்திகள் வணிகம்
நிலையான உள்நாட்டு பொருளாதாரச் சூழல்: அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் முன்னேற்றம்
கோலாலம்பூர்:
உள்நாட்டு பொருளாதார அடிப்படைகளில் நிலவும் நிலைத்தன்மை, முதலீட்டாளர்களின் நம்பிக்கை காரணமாக, அமெரிக்க டாலர் வலுவாக இருந்த போதிலும், மலேசிய ரிங்கிட் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை முடிவில் 3.9110/9170 ஆக இருந்த மலேசிய ரிங்கிட் இன்று காலை 8 மணியளவில்அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9100/9230 என்ற நிலையில் வலுப்பெற்றுள்ளது.
உள்நாட்டு பொருளாதார தரவுகள் சாதகமாகவும், மலேசியாவின் மெக்ரோ பொருளாதார எதிர்பார்ப்புகளின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை தொடர்வதும், உள்ளூர் நாணயத்திற்கான தேவையை அதிகரிக்கிறது என்று மலேசிய முவாமாலாட் வங்கி நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மது அஃப்சனிசாம் அப்துல் ரஷீத் கூறினார்.
“மலேசிய பொருளாதாரத்தின் வலுவான தரவுகள் ரிங்கிட்டின் மீது ஆர்வத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தும். எனவே, இன்று அமெரிக்க டாலர் – ரிங்கிட் மாற்று விகிதம் RM3.91 முதல் RM3.93 வரை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இருப்பினும், எதிர்பார்ப்பை விட வலுவான அமெரிக்க தொழிலாளர் சந்தை தரவுகள் காரணமாக, அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 0.13 சதவீதம், 96.920 புள்ளிகளாக உயர்ந்து அமெரிக்க பொருளாதாரத்தின் நிலைத்தன்மையைப் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
“இதன் காரணமாக, அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதங்களை நிலையாக வைத்திருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் பணவீக்கம் இரண்டு சதவீத இலக்கை மீறி தொடரலாம் ௭ன ௭திர்ப்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் விவசாயமற்ற வேலைவாய்ப்பு (NFP) அறிவிப்பை முன்னிட்டு, வர்த்தகர்கள் லாபம் ஈட்டும் நோக்கில் சில பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்,” என்று மேலும் பேசிய அவர் கூறினார்.
ஜனவரியில் அமெரிக்காவின் NFP 1.30 லட்சமாக இருந்தது. இது 66,000 என்ற எதிர்பார்ப்பை விட அதிகமாகும்.
அதே சமயம், வேலைவாய்ப்பு இழப்பு விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாக குறைந்தது. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 62.4 சதவீதத்திலிருந்து 62.5 சதவீதமாக உயர்ந்துள்ளது ௭ன்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இன்று, ரிங்கிட் முக்கிய உலக நாணயங்களுடன் ஒப்பிடுகையில் உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் யெனுக்கு எதிராக 2.5514/5600 ஆக உயர்ந்தது (முன்பு 2.5527/5566),
பிரிட்டன் பவுண்டுக்கு எதிராக 5.3266/3443 ஆக உயர்ந்தது (முன்பு 5.3561/3643),
யூரோவுக்கு எதிராக 4.6431/6586 ஆக உயர்ந்தது (முன்பு 4.6611/6683).
இந்தோனேஷியா ரூப்பியாவுக்கு எதிராக 232.9/233.7 ஆக உயர்ந்தது,
தாய்லாந்து பாட்டுக்கு எதிராக 12.5728/6227 ஆக உயர்ந்தது,
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.0980/1086 ஆக வலுப்பெற்றுள்ளது.
அதே நேரத்தில், பிலிப்பைன்ஸ் பெசோவுடன் ஒப்பிடுகையில் 6.71/6.73 என்ற நிலையில் மாற்றமின்றி நிலைத்திருந்தது.
இந்திய ரூபாய் ஒரு ரிங்கிட்டிற்கு ரூபாய் 23.18 காசுக்கு விற்பனை ஆனது
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 5:34 pm
5 பேர் அமரக்கூடிய காரை அறிமுகம் செய்கிறது Ferrari
May 26, 2026, 9:56 am
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சால் ரிங்கிட் உயர்வு: சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்
May 20, 2026, 11:40 am
நச்சுணவால் நெஸ்ட்லெ, டெனன் பால்மாவு மீட்பு: நிறுவனங்கள்மீது விசாரணை
May 19, 2026, 8:48 pm
Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி
May 15, 2026, 12:22 pm
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றார்
May 14, 2026, 4:26 pm
சபாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை: பனைத் தொழிலில் புதிய பொருளாதாரப் புரட்சி
May 11, 2026, 5:05 pm
