நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட்டால் தேசிய முன்னணி வெற்றி பெறும்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

நாட்டின் 15 வது பொதுத் தேர்தல் விரைவாக நடத்தப்பட்டால் அதில் தேசிய முன்னணி மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பலரீதியில் பிரிந்து கிடக்கின்றன.

அதே வேளையில் தேசிய முன்னணியில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அந்தக் கூட்டணி மக்களிடம் நல்ல ஆதரவை பெற்று வருகிறது.

இதனால் வரும் 15 ஆவது பொது தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என அம்னோவும் தேசிய முன்னணியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அப்படி ஒருவேளை பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் அதில் தேசிய முன்னணி மகத்தான வெற்றியை பெறும். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்று துன் மகாதீர் கூறியுள்ளார்.

ஆளுங்கட்சி தேர்தலுக்கு தயாராக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் முழுமையாக இன்னும் தயாராகவில்லை.

எதிர்க்கட்சிகளின் பலவீனத்தின் அடிப்படையில்தான் ஆளும் கட்சியான தேசிய முன்னணி தேர்தலுக்கு வற்புறுத்தி வருகிறது.

தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையில்தான் அக்கூட்டணி இதனை செய்து வருகிறது என்று அவர் கூறினார்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெற்றால் அம்னோவுக்கு வெற்றி கிடைக்கும் என்றும், மக்கள் தங்களைத்தான் எதிர்நோக்கியுள்ளனர் என்றும் அக்கட்சி கருதுகிறது.


"அம்னோ தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், தாம் மீண்டும் அரசியல் களத்துக்கு வர முடியும் என முன்னாள் பிரதமர் நஜிப்பும் நம்புகிறார். 

புதிய அரசாங்கம் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள், விதிக்கப்ட்ட தண்டனைகளில் இருந்து மன்னிப்பு அளித்து விடுவிக்கும் என அவர் கருதுகிறார்.

"அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்தில் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுவார் என்பதால், நஜிப் நாட்டின் பிரதமராகக் கூட பதவியேற்க முடியும். அவர் நிச்சயம் இதைச் செய்வார். என்னை நம்புங்கள், அவர் இவ்வாறு செயல்படுவார்," என்றார் மகாதீர்.

மலாய் வாக்காளர்களின் ஆதரவு மீண்டும் அம்னோ பக்கம் திரும்பி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வாக்காளர்களுக்கு பணமும் இதர ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளதாகச் சாடினார்.

அம்னோ தேசியத் தலைவர் ஸாஹித் ஹமிடி, நஜிப் உள்ளிட்ட தலைவர்கள் அடுத்த பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மற்றொரு தரப்பினர் தேர்தலுக்கு அவசரமில்லை எனக் கூறுகின்றனர்.

இந்நிலையில் துன் மகாதீர் இந்த விவகாரம் தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்

தொடர்புடைய செய்திகள்

+ - reset