நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் போட்டியில் தோல்வி கண்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவேன்: ரஃபிசி ரம்லி திட்டவட்டம் 

செர்டாங்: 

பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் போட்டியில் தோல்வி கண்டால் தான் அமைச்சரவையில் இருந்து விலகுவேன் என்று பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிசி ரம்லி திட்டவட்டமாக தெரிவித்தார். 

இந்த விவகாரத்தில் தாம் மன நிம்மதியுடன் இருப்பதால் பல விவகாரங்களுக்கு சுதந்திரமாக குரல் எழுப்ப முடியும் என்று ரஃபிசி ரம்லி சொன்னார். 

பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் பதவியில் தாம் தோல்வி அடைந்தால் பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன். அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினாலும் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றுவேன் என்று அவர் தெரிவித்தார். 

பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு நூருல் இசா அன்வார் போட்டியிடும் சூழலில் தற்போது ரஃபிசி ரம்லி போட்டியில் களம் காண்கிறார். மே மாத இறுதியில் பிகேஆர் கட்சியின் உயர்மட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset