
செய்திகள் மலேசியா
இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி என்ற நமது அடையாளத்தை இழந்து விடக் கூடாது: தமிமுன் அன்சாரி
திருச்சி:
இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி என்ற நமது அடையாளத்தை தமிழ் முஸ்லிம்கள் இழந்து விடக் கூடாது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி கூறினார்.
திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி வரும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்திற்கு எனது வாழ்த்துகள்.
மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்து அதிகமான பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் தமிழ் நாட்டில் இருந்து குறைவான பேராளர்கள் கலந்து கொண்டுள்ளது வருத்தமாக உள்ளது.
இருந்தாலும் வரும் காலங்களில் இந்நிலை மாற வேண்டும்.
அதிகமான இளைஞர்கள் இதுபோன்ற மாநாடுகளில் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் மிகப் பெரிய தொண்டை ஆற்றியுள்ளனர்.
ஆரம்ப காலம் தொட்டே வீடுகளில் நல்ல தமிழ் பேசபவர்கள் தமிழ் முஸ்லிம்கள்.
இந்த தமிழை உலக முழுவதும் கொண்டு சேர்த்தவர்களும் தமிழ் முஸ்லிம்கள் தான்.
குறிப்பாக மலேசியாவில் நமது பாரம்பரியம் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் கூட கடைகளுக்கு தமிழில் பெயர் இருக்காது. ஆனால் மலேசியாவில் உள்ள கடை வீதிகளில் தமிழ் கொஞ்சி விளையாடும்.
இதன் அடிப்படையில் தான் நமது முன்னோர்கள் இஸ்லாம் எங்கள் வழி. இன்பத் தமிழ் எங்கள் மொழி என சொல்லி வளர்த்தார்கள்.
இது தான் நமது அடையாளம். இதை நாம் இழந்து விடக்கூடாது என்று தமிமுன் அன்சாரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 10, 2025, 1:22 pm
அன்னையின் கருவறை ஆலய கருவறையைவிட சிறந்தது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அன்னையர் தின வாழ்த்து
May 10, 2025, 12:44 pm
பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்குப் பிரதமர் அன்வார் போட்டியின்றித் தேர்வு
May 10, 2025, 12:26 pm
கெஅடிலானில் எந்தப் பிரிவுகளும் இல்லை; அன்வார் அணி மட்டுமே உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
May 10, 2025, 12:18 pm
விசாகத் தினத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச ஃபெரி சேவை
May 10, 2025, 12:01 pm