நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவில்லை என்றால் அழிந்து விடும்: டத்தோ வீரா ஷாகுல் தாவூத்

திருச்சி:

தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவில்லை என்றால் அழிந்து விடும்

எச்ஆர்டி கோர்ப் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆய்வரங்கத் தொடக்க விழா  இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அவர்,

தமிழ் முஸ்லிம் மக்கள் மிகப் பெரிய வரலாற்றை கொண்டவர்கள் ஆவர். இந்த வரலாற்றை நாம் பெருமையாக பேசி வருகிறோம். 

ஆனால் அதை காக்க நிகழ் காலத்தில் என்ன செய்கிறோம். 

அதை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு சேர்க்க போகிறோம் என்பது தான் மிகப் பெரிய கேள்வியாகும்.

இஸ்லாத்தையும் தமிழ், இலக்கியத்தையும் நாம் பிரித்து பார்க்க முடியாது.

தமிழ் மொழி, இலக்கியத்திற்காக பாடுப்பட்ட பல தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகள் இந்த நிகழ் காலத்தில் எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை.

இப்போதே தெரியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு அது எப்படி போய் சேரும்.

எப்படி தமிழ் முஸ்லிம் மக்களின் வரலாற்றில் பாதுகாக்க முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

ஆகையால் இந்த வரலாறுகளை பாதுகாக்க பல நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக இதுபோன்ற மாநாடுகள், விழாக்களில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் என்று டத்தோ வீரா ஷாகுல் கூறினார்.

முன்னதாக நேற்றைய தொடக்க விழாவில் பேசிய மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் 10ஆவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டை மலேசியாவில் நடத்த வேண்டும் என பரிந்துரைத்தார்.

இந்த வாய்ப்பு கிடைத்தால் அம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்த நாங்கள் தயார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset