நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி 

கலிஃபோர்னியா:

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள விமான நிலையத்திற்கு மேலே இரு சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இரு விமானங்களில் பயணித்தவர்களும் மண்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு விமானத்தில் இருவரும் இன்னொரு விமானத்தில் ஒருவரும் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இரு விமானங்களும் வாட்சன்வில் முனிசிபல் (Watsonville Municipal) விமான நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

விமானம் விழுந்த பகுதியில் தரையில் இருந்தவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இரு விமானங்களில் இருந்த மூவரும் இறந்துவிட்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். 

விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
- AFP 

தொடர்புடைய செய்திகள்

+ - reset