நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜக மூத்த தலைவருக்கு எதிராக பாலியல் புகார் பதிய நீதிமன்றம் உத்தரவு

புது டெல்லி:

பாலியல் வன்கொடுமை புகாரில் பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய தயக்கம் காட்டியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்ய தடை விதித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் வழக்குப் பதிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஹுசைன் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset