நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கோத்தபய ராஜபட்ச 24-இல் நாடு திரும்புகிறார்

கொழும்பு:

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச, வரும் 24ஆம் தேதி நாடு திரும்பவுள்ளதாக அவரது உறவினரும் ரஷியாவுக்கான முன்னாள் இலங்கை தூதருமான உதயங்க வீரதுங்க புதன்கிழமை தெரிவித்தார்.

இலங்கையில் ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 13ஆம் தேதி நாட்டைவிட்டு தப்பினார் கோத்தபய ராஜபட்ச. முதலில் மாலத்தீவுக்கும், அங்கிருந்து சிங்கப்பூருக்கும் சென்ற அவர், தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனிடையே, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அனுமதி கிடைத்ததை அடுத்து, கடந்த 11ஆம் தேதி அங்கு சென்றார்.

பாங்காக் நகரிலுள்ள விடுதியில் தங்கியுள்ள அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக அறையைவிட்டு வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோத்தய ராஜபட்ச தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும், வரும் 24ஆம் தேதி அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் வீரதுங்க தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset