நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் பணவீக்கம் உச்சத்தை அடையும்: துணைப் பிரதமர் வோங்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் பணவீக்கம் இந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் உச்சத்தை எட்டக்கூடும் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான  லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

Bloomberg செய்திக்கு அளித்த நேர்காணலில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

பணவீக்கம் நாலாம் காலாண்டில் உச்சத்தைத் தொட்டுப் பின்னர்  தணியக்கூடும் என்றும்  நிதி அமைச்சர் வோங் கூறினார்.

பொருளாதார நிலைமையை அரசாங்கம்  தொடர்ந்து கண்காணிக்கும் என்றார் அவர்.

பணவீக்கம் மோசமடைந்தால் கூடுதல் உதவி வழங்கப்படும் என்று சிங்கப்பூரர்களுக்கு அவர் உறுதிதெரிவித்தார்.

உலகளாவிய பணவீக்கத்துக்கு இடையே, சிங்கப்பூரின் பயனீட்டாளர் விலைக் குறியீடு கடந்த ஜூன் மாதம் 6.7 விழுக்காடு உயர்ந்தது.

அதுவே கடந்த 13 ஆண்டுகளில் ஆக அதிக வேகத்தில் பதிவான ஏற்றம்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கையாகச் சிங்கப்பூர் நாணய வாரியம் கடந்த மாதம் அதன் நாணயக் கொள்கையை இறுக்கமாக்கியது.

கடந்த அக்டோபரிலிருந்து வாரியம் அதன் நாணயக் கொள்கையை அவ்வாறு செய்வது இது 4ஆவது முறை என்று சிங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset