நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமேசான் இணையதளம் விரைவில் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடப் போகிறது

வாஷிங்டன்: 

அமேசான் நிறுவனம் தனது இணையதளம் மற்றும் மொபைல் செயலி, செய்தி, பொழுதுபோக்கு, பல்வேறு கட்டுரைகளை சார்ந்த விஷயங்களை ரகசியமாக இணைத்து வருகிறது. விரைவில், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

அமேசான் நிறுவனம், தனது இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பில் சேர்க்கப்பட்ட இந்த ‛பிரத்யேக கட்டுரைகள்' என்ற புதிய பகுதியில், எக்ஸ்குளூசிவ், டிரெண்டிங் செய்திகள், பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் நிர்வாகம், விளையாட்டு, வணிகள் மற்றும் நிதி, உடல்நலம், சமூகம் மற்றும் லைப் ஸ்டைல் புத்தகம், உணவு, நடப்பு விவகாரம், கற்பனை கதைகள், பயணக்கட்டுரைகள், ஆட்டோமொபைல், போன்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டு உள்ளன. பல்வேறு செய்தி நிறுவனங்களில் கட்டுரைகள் மற்றும் 
பதிப்பகங்களின் செய்திகளை ஒரே இடத்தில் படிக்கும் வகையில் ஏற்படுத்தி உள்ளது. இந்த வசதி குறித்து ஒரு சில பயனாளர்களுக்கே தெரிய வந்துள்ளது.

இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இந்த வசதி குறிப்பிடப்படவில்லை. அந்த இணையதளத்தில், தேடுதல் பக்கத்தை பயன்படுத்தி ‛‛ பிரத்யே கட்டுரைகள் '' தேடுவதன் மூலம் பார்க்க முடியும். 5 நிமிடங்களுக்குள் படிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், சில செய்திகளை படிப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை தாண்டும் வகையிலும் உள்ளது.

இந்த பகுதியில் உள்ள செய்திகள், அவுட்லுக், இந்தியா டுடே, வெஸ்ட்லேண்ட், ஹார்பர் கலின்ஸ், ஹசேட்டே இந்தியா உள்ளிட்ட இணைய பக்கங்களில் இருந்தும் அமேசான் பிரைம் வீடியோவில் இருந்தும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

டெக் கிரஞ்ச் தகவல்படி, சில பயனாளர்கள், பிரத்யேக கட்டுரைகள் குறித்து தெரிந்து வைத்துள்ளனர். இணையம், மொபைல் செயலியில் வெளிப்படையாக பார்க்க முடியவில்லை. 

வெளிப்படையாக அறிவிப்பதற்கு முன்னர், இதனை ரகசியமாக சோதனை முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset