நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட மலேசியர்களில் 26 பேர் உடல்நலம் குன்றியுள்ளனர்

கோலாலம்பூர்:

நடப்பாண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட சுமார் 14 ஆயிரம் மலேசிய யாத்ரீகர்களில் சிலரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இத்ரிஸ் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஹஜ் யாத்ரீகர்களும் உடலளவிலும் மனதளவிலும் அனைத்து சடங்குகளை மேற்கொள்வதற்கு ஏற்ப தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Jemaah haji bergerak ke Muzdalifah

இந்த ஆண்டு 14,306 மலேசியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் Zulhijjah-வுக்காக எட்டாம் நாளன்று Arafah-வுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக நேற்று மெக்காவில் செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் கூறினார்.

தற்போது 26 மலேசியர்கள் பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் Arafahவில் பங்கேற்க சிறப்பு வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இத்ரிஸ் அஹ்மதிடம் கூறினார்.

நடப்பாண்டில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது ஹஜ் பயணத்தை முழுமையாக முடிப்பதை தபுங் ஹாஜி உறுதி செய்யும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த 2016 ஆண்டு அமல்படுத்தப்பட்ட Wukuf Safari மூலம் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

"உடல்நலம் குன்றியவர்களுக்கு ஆம்புலன்ஸ் அல்லது பேருந்துகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். இதனூடே அவர்கள் wuquf Arafah மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். நேற்றைய தினம் சிகிச்சை மையத்தில் இருந்து 26 நோயாளிகள், 68 மருத்துவப் பணியாளர்களுடன் பயணம் மேற்கொள்ள நான்கு பேருந்துகள் அளிக்கப்பட்ட," என்று இத்ரிஸ் அஹ்மத் மேலும் கூறினார்.

யாத்ரீகர்கள் உடல்நலனைப் பொறுத்தவரையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தபுங் ஹாஜி பணியாளர்கள் தெரிவித்த அனைத்து உத்தரவுகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset