நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐ-பேப் திட்டத்தின் கீழ் 20 நிறுவனங்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

ஐ-பேப் திட்டத்தின் கீழ் 20 நிறுவனங்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் மானியமாக (கிராண்ட்) வழங்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட 20 இந்திய சிறு வணிக நிறுவனங்களுக்கு இம்மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 61 விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தகுதித் தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காக எஸ்எம்இ கோர்ப்பின் கீழ் ஐ-பேப் திட்டம் உருவாக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 6 மில்லியன் இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது.

இதுவரை 20 நிறுவனங்கள் என மொத்தம் 70 சிறு தொழில் வணிகர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெறுவார்கள்.

ஐ-பேப் திட்டத்தின் வாயிலாக மானியம் பெற்ற நிறுவனங்களுக்கு ஒப்புதல் கடிதம் வழங்கும் நிகழ்வில் டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

முன்னதாக டத்தோஸ்ரீ ரமணன் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இத்திட்டத்தை அறிவித்தார்.

இந்திய தொழில்முனைவோர் வியாபாரத்தை மேம்படுத்துவது அல்லது வணிக செயல் திறனை அதிகரிக்க உதவும் வகையில் 100,000 ரிங்கிட் வரை பொருந்தக்கூடிய மானியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset