செய்திகள் மலேசியா
மித்ரா மானியத்திற்கு டிசம்பர் 2ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்: பிரபாகரன்
புத்ராஜெயா:
மித்ரா மானியத்திற்கு வரும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
மித்ரா சிறப்பு நடவடிக்கை குழு தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.
பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மித்ரா என்றழைக்கப்படும் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவின் நிதிக்கு முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அரசு சார்பற்ற அமைப்புக்கள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் இந்த மித்ரா நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
மித்ரா போர்ட்டல் எப்போது திறக்கப்படும் என்று மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை மித்ரா நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றார் அவர்.
உயர்கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கும் சிறுநீரக நோயாளிகளுக்கும் இவ்வாண்டு இறுதிக்குள் நிதி வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலித்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மித்ரா நிதி அனைத்தும் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
யார் யாருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது என்று பெயர் பட்டியலை மித்ரா அகப்பக்கத்தின் வழியாக பார்த்து கொள்ளலாம்.
இதில் எந்தவொரு ஒளிவு மறைவும் இல்லை. அனைத்தும் சீராக மற்றும் முறையாக உள்ளது என்று அவர் சொன்னார்.
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மித்ரா ஏற்பாட்டில் இன்று புத்ரா ஜெயாவில் தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய இலக்கு நோக்கிய பயணத்துக்கு ஆலோசனை வழங்கவும், அதன் செயல்பாடுகளை தீவிரமாகக் கண்காணிக்கவும் சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அதிகாரப்பூர்வமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 27, 2024, 7:24 pm
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நிதியுதவி பெறுவதற்கான புதிய விதிகள் முட்டாள்தனமானது: டத்தோஸ்ரீ சரவணன்
November 27, 2024, 7:15 pm
இளைஞர்கள் வியாபாரத் துறையில் வெற்றி நடைபோடுவது மகிழ்ச்சியளிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
November 27, 2024, 4:57 pm
நாட்டில் இரண்டாவது குரங்கம்மை நோய் தொற்று சம்பவம் பதிவு: சுகாதார அமைச்சு
November 27, 2024, 4:54 pm
சவால்களை எதிர்க்கொள்ள இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்: ஃபஹ்மி ஃபாட்சில்
November 27, 2024, 4:27 pm
வழிபாட்டு தளங்கள் நிதியை பெற்றிருந்தால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?: டத்தோ லோகபாலா கேள்வி
November 27, 2024, 4:07 pm
டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
November 27, 2024, 4:01 pm
கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முடிவு செய்யும்: ஜுல்கிஃப்லி அஹமத்
November 27, 2024, 3:45 pm
வெள்ளிக்கிழமை வரை மூன்று மாநிலங்களில் தொடர் கனமழை பெய்யும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
November 27, 2024, 2:45 pm