நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முடிவு செய்யும்: ஜுல்கிஃப்லி அஹமத் 

ஷா ஆலம்: 

கோவிட்-19 தடுப்பூசிகளின் பயன்பாட்டிற்கு எதிராக அரசு மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றம் முடிவு செய்யும் என்று  சுகாதார அமைச்சர் ஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார். 

சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு நாடு என்ற வகையில், இந்த விவகாரம் எங்கள் சட்ட நடைமுறை மூலம் நீதிக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றார் அவர். 

முன்னதாக, கோவிட்-19 தடுப்பூசிகளால் மரணம் மற்றும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறி, எட்டு மலேசியர்கள் அரசாங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) மீது 60 மில்லியன் மதிப்பிலான வழக்கைத் தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கில் தற்போதைய சுகாதார அமைச்சர் ஜுல்கிஃப்லி, முன்னாள் சுகாதார அமைச்சர்கள் கைரி ஜமாலுடின், டத்தோஶ்ரீ டாக்டர் அதாம் பாபா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset