நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழிபாட்டு தளங்கள் நிதியை பெற்றிருந்தால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?: டத்தோ லோகபாலா கேள்வி

கோலாலம்பூர்: 

நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்கள், ஏற்கெனவே அரசு உதவிநிதியைப் பெற்றிருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும்.

மானியம், உதவி கோரி விண்ணப்பப் படிவத்துடன் வர வேண்டாம் என்று  வீடமைப்பு ஊராட்சித் துறை துணை அமைச்சர் ஐமான் அதிரா சாபு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

துணை அமைச்சரின் இந்த அறிவிப்பு நாட்டில் உள்ள  ஆலய நிருவாகத்தினரை கவலை அடையச் செய்துள்ளது.

நாட்டில் உள்ள இந்து கோவில்கள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி தேவைப்படுகிறது.

காரணம் வழிபாட்டு தலங்களை பராமரிக்க நிர்வாகத்திற்கு மானியம் தேவைப்படுகிறது.

அந்த வகையில் வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு தனது முடிவை பரிசீலனை செய்யும்படி டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.

பதிவு பெற்று முறையாக செயல்படும் வழிபாட்டு தலங்களுக்கு கண்டிப்பாக அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset