நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நிதியுதவி பெறுவதற்கான புதிய விதிகள் முட்டாள்தனமானது: டத்தோஸ்ரீ சரவணன்

புத்ராஜெயா: 

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நிதியுதவி பெறுவதற்கான அரசாங்கத்தின் புதிய விதிகள் முட்டாள்தனமானது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

முஸ்லிம் அல்லாத  வழிபாட்டுத் தலங்களுக்கு நிதி வழங்கும் விதிகளை மாற்றும் அரசின் திட்டத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர், இந்த புதிய விதிகள் முட்டாள்தனமாகவும், இந்தியர்களை அலட்சியப் படுத்தும் வகையிலும் இருப்பதாக கூறியதோடு, 

இந்த முயற்சியால் இந்திய சமூகத்திடையே அரசு மீது ஆதரவு குறையக்கூடும் என்றும் எச்சரித்தார்.

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை அவமதிக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.

இந்து கோயில்கள் சமூக ஒற்றுமை, புரிதல், மற்றும் சமூக நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிதி கிடைக்காமல் இவை மிகவும் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல இந்துக் கோயில்கள் தற்போது சிக்கலான பொருளாதார நிலையில் உள்ளன, புதிய விதிகள் அவற்றின் அவசரத் தேவை மற்றும் பராமரிப்பு வேலைகளுக்குத் தடையாக அமையும்.

நிதி முறைகேடுகளை தடுப்பதற்காக, அரசு கடுமையான வழிமுறைகள், கண்காணிப்பு முறைமைகளைக் கொண்டு வர வேண்டும். 

விதிகளை மாற்றுவதற்குப் பதிலாக, நிதி விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் குழுக்களை அமைப்பது நியாயமான மற்றும் பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

முன்னதாக மூன்று ஆண்டுகளுக்குள் அரசு நிதியைப் பெறுபவர்கள் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது என அரசு அறிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset