செய்திகள் உலகம்
இந்தியாவில் மதச் சுதந்திரம் இல்லை: அமெரிக்க ஆணையம் கண்டனம்
வாஷிங்டன்:
இந்தியாவில் மதச் சுதந்திரம் கையாளப்பட்டு முறை குறித்து சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க தூதர் ரஷத் உசைன் வருத்தம் தெரிவித்தார்.
பல்வேறு மத சமூகங்கள் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு காணக் கோரி இந்திய அதிகாரிகள் மூலம் நேரடியாக வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச மதச் சுதந்திர மாநாட்டில் ரஷத் ஹுசைன் பங்கேற்று பேசுகையில், இந்தியாவில் தற்போது குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெளிப்படையாக படுகொலை செய்ய அழைப்பு விடுக்கப்படுகிறது.
தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன.
ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் இடிக்கப்படுகின்றன.
அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகவே முஸ்லிம்கள் கரையான்கள் என்கிறார்.
இதுபோன்ற அறைகூவல்களை நாங்கள் கவனத்தில் எடுத்து கொள்கிறோம். மதச் சுதந்திரம் கையாளப்பட்டு வரும் முறை வருத்தமளிக்கிறது.
மனித உரிமைகள், மதச் சுதந்திரம் குறித்து இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் எடுத்துரைக்க வேண்டியது அமெரிக்காவின் கடமையாகும்.
உதய்பூரில் நடைபெற்ற படுகொலைச் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளோம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
