நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளத்தில் ஆந்த்ராக்ஸ் பரவல்

திருவனந்தபுரம்:

கேரளத்தின் அதிரப்பள்ளி வனப் பகுதியில் கடந்த சில நாள்களாக காட்டுப் பன்றிகள் ஆந்த்ராக்ஸ் பாதிப்பால் மடிந்து வருவது அதிகரித்து வருகிறது.

எனினும், இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஹரிதா வி.குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆந்த்ராக்ஸ் பாதிப்பு சில காட்டுப் பன்றிகளுக்கு மட்டும் இருந்தது.

அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு பரவவில்லை. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பாதிப்பு பரவுவது மிகவும் அரிது.

ஆகையால், இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன' என்றார்.

அதிரப்பள்ளி வனப் பகுதியில் கடந்த சில நாள்களாக 6 காட்டுப்பன்றிகள் மடிந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset