
செய்திகள் இந்தியா
மகாராஷ்டிர முதல்வராக அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு - துணை முதல்வரானார் தேவேந்திர ஃபட்னவீஸ்
மும்பை:
மகாராஷ்டிரத்தில், பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று அவர் கூறியிருந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் ஷிண்டேவுக்கும் ஃபட்னவீஸுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இது பதவி அதிகாரத்துக்கான போராட்டம் இல்லை. ஹிந்துத்துவ கொள்கையைக் காப்பாற்றுவற்கான போராட்டம்.
கடந்த 2019இல் பாஜகவும் சிவசேனையும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. ஆனால், தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் வகையில், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனை கை கோத்தது.
சிவசேனை நிறுவனத் தலைவர் பால் தாக்கரே தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைத்தார். இதனால்தான் சிவசேனை கட்சிக்குள் கிளர்ச்சி ஏற்பட்டது என்றார் அவர்.
மகாராஷ்டிரத்தின் 20ஆவது முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே அரசியலில் வருவதற்கு முன் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளார்.
1964இல் பிறந்த அவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பால் தாக்கரேவின் சிவசேனை கட்சியில் தானேவில் இணைந்துள்ளார்.
1997இல் தாணே மாநகராட்சியின் உறுப்பினரானார். 2004இல் முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற அவர், தற்போதைய பேரவையில் நான்காவது முறை எம்எல்ஏவாக உள்ளார். இரண்டு முறை அமைச்சர் பதவியையும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஏக்நாத் ஷிண்டே பதவி வகித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm
இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முதலீடு ஒப்பந்தம்
September 9, 2025, 1:31 pm
விமான பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைத் திருடிய 15 அதிகாரிகள் நீக்கம்
September 9, 2025, 7:12 am
இன்று இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
September 8, 2025, 6:13 pm
அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தை மோடி தவிர்ப்பு
September 8, 2025, 1:23 pm