நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் தினசரி கொரோனா தொற்று 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 11,504 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஆங் யே குங் கூறுகையில், கொரோனாவில் புதிய அலை எதிர்பார்த்ததற்கு முன்பே எழுந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு இனி வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று துணை பிரதமர் லாரன்ஸ் வாங் எச்சரித்தார்.

எனினும், இப்போதைக்கு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டிய தேவையில்லை எனவும் நோய்த்தடுப்பு விதிமுறைகளில் தேவைப்படும் நேரங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 10,732 பேருக்கு சமூக பரவல் மூலம் அந்த நோய் பரவியுள்ளது. 772 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.

இது தவிர, கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,410ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 14,25,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset