நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கப் போர்க்கப்பல் பிலிப்பைன்ஸ் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு 

மணிலா: 

அமெரிக்கப் போர்க்கப்பலொன்று பிலிப்பைன்ஸ் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூழ்கியுள்ள அந்தக் கப்பல் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. அது சுமார் 7,000 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஆய்வுக்குழுவொன்று தெரிவித்தது. 

USS Samuel B Roberts என்றழைக்கப்படும் அந்த கப்பல் சமார் தீவில் போரின் மத்தியில் மூழ்கடிக்கப்பட்டது. அது அக்டோபர் 25ஆம் தேதி 1944ஆம் ஆண்டில் கடல் மட்டத்துக்கு அனுப்பப்பட்டது. 

உலகில் மூழ்கிய கப்பல்களிலேயே USS Samuel B Roberts ஆக ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. 

சிறிய போர்க்கப்பலான அது ஜப்பானின் அதிநவீன பெரிய போர்க்கப்பலை எதிர்த்துக் கடைசிவரை போரிட்டதாக அமெரிக்கக் கடற்படை வரலாற்றில் கூறப்படுகிறது. 

அதிலிருந்த சிப்பந்திகள் கடலில் கிட்டத்தட்ட 3 நாள்கள் மிதந்து மீட்கப்படக் காத்திருந்தனர் என்றும் அவர்களில் சிலர் சுறா தாக்கியதால் மாண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. போர்க் கப்பலில் இருந்த 224 பேரில் 89 வீரர்கள் மாண்டனர் என்றும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset