
செய்திகள் வணிகம்
வணிகக் குற்றங்களில் 68% இணையம் வழி நடைபெற்ற மோசடிகள்
கோலாலம்பூர்:
கடந்த ஆண்டு நிகழ்ந்துள்ள வணிகக் குற்றங்களில் 68 விழுக்காடு இணையம் வழி நடைபெற்ற மோசடிகள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட தரப்புக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சுமார் 5.2 பில்லியன் ரிங்கிட் என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் இதுபோன்று 71,833 வழக்குகள் பதிவாகி உள்ளதாக காவல்துறை தலைவர் ஐஜிபி அக்ரைல் சானி அப்துல்லாஹ் (Acryl Sani Abdullah Sani) தெரிவித்தார்.
அவற்றுள் இணையம் வழி பொருட்கள் வாங்குவது தொடர்பில் நிகழ்ந்துள்ள மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரம் இருக்கும் என்றார் அவர்.
நடப்பாண்டில் இந்த வகை குற்றங்களின் எண்ணிக்கை இதுவரை 3,800 என்றார் அவர்.
"மொத்த வழக்குகளில் இணையம் தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை 48,450 ஆகும். அதாவது 68 விழுக்காடு. இவற்றுள் நீதிமன்றத்தில் 26,213 வழக்குகள் பதிவாகி உள்ளன.
"அனைத்து வழக்குகளிலும் காவல்துறை தீவிர கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் இத்தகைய மோசடிகள் தடுக்கப்படும் என்பதை உறுதி செய்கிறோம். இணையம் வழி பொதுமக்கள் இனியும் ஏமாறக்கூடாது என விரும்புகிறோம்.
"இணைய மோசடிகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டாம். இதற்கான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
"குறிப்பாக பெருநிறுவனங்கள், மூத்த குடிமக்கள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்," என்றார் Acryl Sani Abdullah Sani.
தொடர்புடைய செய்திகள்
August 16, 2022, 8:16 pm
இந்தியாவில் மேலும் 12 நகரங்களில் லூலூ வணிக வளாகங்கள்
August 13, 2022, 6:40 pm
தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்கள்: ஜான்சன்ஸ் பேபி பவுடர் விற்பனை நிறுத்தப்படுகிறது
August 2, 2022, 2:28 pm
உள்நாட்டு மக்களுக்கு இஹ்ஸான் குழுமம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது: டத்தோ அப்துல் ஹமீத்
July 23, 2022, 3:57 pm
கார் உதிரிப் பாக உற்பத்தி துறையில் இரண்டு பில்லியன் ரிங்கிட் இழப்பு
July 19, 2022, 4:56 pm
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மீண்டும் வீழ்ந்தது: 2022 இல் மட்டும் 7% மேல் சரிவு
July 15, 2022, 5:08 pm
அச்சுறுத்தும் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சிங்கப்பூர்
July 12, 2022, 10:10 am
17 போயிங் 737-8 விமானங்களை வாங்குகிறது பாதிக் ஏர்
July 8, 2022, 3:02 pm
கோதுமை மாவு, மைதா மாவு, ரவை ஏற்றுமதிக்கு இந்தியா தடை
July 3, 2022, 8:28 pm
தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவீதம் அதிகரித்தது இந்தியா
June 29, 2022, 8:00 pm