நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இடைத்தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் கட்சி தோல்வி

லண்டன்:

பிரிட்டனில் 2 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் கன்சர்வேடிக் கட்சி தோல்வியடைந்தது.

வடக்கு இங்கிலாந்தின் வேக்ஃபீல்டு மற்றும் தெற்கு இங்கிலாந்தின் டிவெர்டன் மற்றும் ஹானிடன் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தல், போரிஸ் ஜான்ஸன் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்கணிப்பாகக் கருதப்பட்டது.

இந்த நிலையில், வேக்ஃபீல்டு தொகுதியை முக்கிய எதிர்க்கட்சியான லேபர் கட்சியிடமும் டிவெர்டன் மற்றும் ஹானிடன் தொகுதியை லிபரல் ஜனநாயகக் கட்சியிடமும் கன்சர்வேடிக் கட்சி இழந்தது.

இந்தத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று லேபர் கட்சியின் தலைவரும் போரிஸ் ஜான்ஸனுக்கு மிக நெருக்கமானவருமான ஆலிவர்  தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset