நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

FACEBOOK-இல் 38 சதவீதம் வெறுப்புக் கருத்துகள்

புது டெல்லி:

FACEBOOK-இல் வெறுப்புக் கருத்துகள் வெளியிடுவது 38 சதவீதமும், INSTAGRAM-இல் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் 86 சதவீதமும் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததாக அந்த சமூக ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும்  FACEBOOK-இல் 53,200 வெறுப்புக் கருத்துகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது, முந்தைய மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்ட 38,600 வெறுப்புக் கருத்துப் பதிவுகளோடு ஒப்பிடுகையில் 37.82 சதவீதம் அதிகமாகும்.

இது தவிர,  INSTAGRAM-மில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் வன்முறையைத் தூண்டக் கூடிய 77,000 பதிவுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இது, முந்தைய மார்ச் மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட வன்முறையைத் தூண்டும் 41,300 பதிவுகளோடு ஒப்பிடுகையில் சுமார் 86 சதவீதம் அதிகமாகும்.

FACEBOOK,  INSTAGRAM நடவடிக்கை எடுக்கப்பட்ட பதிவுகளில் பெரும்பாலானவை, மற்ற பயன்பாட்டாளர்கள் அந்தப் பதிவுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் முன்னரே சிறப்பு செயலி மூலம் தாமாக கண்டறியப்பட்டன.

வெறுப்புக் கருத்துகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில், பதிவுகளை நீக்குவது, படங்களை மறைப்பது அல்லது சிலருக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் குறித்து எச்சரிக்கை விடுப்பது ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset