
செய்திகள் வணிகம்
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
புதுடெல்லி:
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் இந்திய ரூபாயின் மதிப்பு சரியலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை (20 ஜூன்) இந்திய ரூபாயின் மதிப்பு 0.6 விழுக்காடு சரிந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு 86.58 ரூபாய் என்ற நிலையை எட்டியது.
நேற்று முன்தினம் (21 ஜூன்) அமெரிக்கா ஈரானின் அணுச்சக்தித் தளங்களைத் தாக்கியது.
அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியுள்ளது.
போர் மோசமாகக்கூடும் என்ற அச்சத்தில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அது இன்னும் உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 3 டாலர் முதல் 5 டாலர் வரை அதிகரிக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அதனால் இந்திய ரூபாயும் இந்தியப் பங்குகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஏற்றுமதிகளில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 87.50 ரூபாய் என்ற நிலையை எட்டலாம் என்று கூறப்படுகிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am
குவைத் மண்ணில் விளைந்த வாழைப்பழங்கள்: முதல் முறையாக வணிக முறையில் விற்பனைக்கு வருகின்றன
August 8, 2025, 12:29 pm
மலேசியாவில் புகழ் பெற்ற டோம்யாம் உணவகம் ராமநாதபுரத்தில் திறப்பு
August 7, 2025, 9:29 pm
சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவும்
August 5, 2025, 10:39 am
மலேசிய ரிங்கிட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்தது
August 4, 2025, 6:30 pm
பிரிக்பீல்ட்ஸில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டீ கடை கஃபே சமூக கடப்பாடுடன் செயல்படுகிறது
August 1, 2025, 6:09 pm