
செய்திகள் வணிகம்
மக்கள் வாங்கும் சக்தியிலான வீடுகளை கட்டும் எஹ்சான் மேம்பாட்டு குழுமத்தின் சமூக கடப்பாடு தொடர வேண்டும்: நெகிரி ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார்
நீலாய்:
மக்கள் வாங்கும் சக்தியிலான வீடுகளை கட்டிவரும் எஹ்சான் மேம்பாட்டு குழுமத்தின் சமூக கடப்பாடு தொடர வேண்டும்.
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள்குமார் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலானில் எஹ்சான் குழுமம் மிகவும் புகழ்பெற்ற மேம்பாட்டு நிறுவனமாக விளங்குகிறது.
வீடமைப்பு, ஹோட்டல் என பல்வேறு துறைகளில் எஹ்சான் குழுமம் ஈடுபட்டு வருகின்றது.
குறிப்பாக எந்தவொரு பிரச்சினையிலும் சிக்காத மேம்பாட்டு நிறுவனமாக எஹ்சான் குழுமம் விளங்குகிறது. மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருகிறது.
குறிப்பிட்ட நேரத்தில் வீடுகளைக் கட்டி முடிப்பதுடன் தரமாகவும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக நீலாயில் எஹ்சான் விடுரி அடுக்குமாடி வீடமைப்பு திட்டத்தை எஹ்சான் தொடங்கியுள்ளது.
மக்களுக்கு வசதியான இடத்தில் மிகவும் தரமான வீடமைப்புத் திட்டமாக இது அமையவுள்ளது.
குறிப்பாக நெகிரி செம்பிலான் மாநில அரசு மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை கட்ட வேண்டும் என மேம்பாட்டு நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது.
ஆனால் ஏஹ்சான் மேம்பாட்டு குழுமத்திற்கு அதுபோன்ற நிபந்தனைகள் இல்லை.
இருந்தாலும் எஹ்சான் குழுமம் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் இந்த வீட்டுக்கான விலையை மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்டு நிர்ணயித்துள்ளனர்.
அவர்களின் இந்த சேவை மகத்தானது. அவர்களின் இப்பணி தொடர வேண்டும் என அருள்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 4:44 pm
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm