
செய்திகள் வணிகம்
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
கோலாலம்பூர்:
உலகச் சந்தை பதற்றத்தால் அமெரிக்க டாலர் உட்பட பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது.
இன்று காலை 8 மணியளவில் மலேசிய ரிங்கிட் 4.2420/2655-க்கு விற்பனையாகியது.
ஈரான் - இஸ்ரேல் போர், அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் காரணங்களால் உலகச் சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்தன.
இதன் காரணமாக மலேசிய ரிங்கிட் மற்ற முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக வலுப்பெற்றுள்ளதாக Bank Muamalat Malaysia Bhd நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் Dr Mohd Afzanizam Abdul Rashid கூறினார்.
முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நிலைக்கு மாறியுள்ளதால், மலேசிய ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக மதிப்பிழக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னணி நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் தொடக்கத்தில் உயர்வைப் பதிவு செய்தது.
ஜப்பான் யெனுக்கு எதிராக, ரிங்கிட் விலை 2.9245/9289ல் இருந்து 2.9023/9186 ஆக உயர்ந்தது.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.7356/7437ல் இருந்து 5.7000/7316 ஆக உயர்ந்தது.
யூரோக்களுக்கு எதிராக, முந்தைய 4.9000/9069 நிலையில் இருந்து 4.8800/9070 ஆக சிறிதளவு உயர்வு காட்டியது.
உள்நாட்டு நாணயம், அண்டை அசியான் நாடுகளின் நாணயங்களைவிட வலிமையாக இருந்தது.
மலேசிய ரிங்கிட் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.3088/3140 இல் இருந்து 3.2948/3133 ஆக உயர்ந்தது.
தாய்லாந்து பாத் நாணயத்திற்கு எதிராக மலேசிய ரிங்கிட் 12.9727/9969 இல் இருந்து 12.9243/13.0042 ஆக அதிகரித்தது.
இந்தோனேசிய ருபாயாவுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 259.2/259.7 இல் இருந்து 258.6/260.2 ஆக முன்னேறியது.
பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக 7.43/7.45 இல் இருந்து 7.42/7.46 ஆக மதிப்பேற்றம் பெற்றது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm