செய்திகள் மலேசியா
மோசமான தாக்கத்தை எதிர்கொள்ள மலேசியர்கள் தயாராக வேண்டும்: நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்:
கொரோனா அலையின் மிக மோசமான தாக்கத்தை எதிர்கொள்ள மலேசியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை ஒட்டி அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
"கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. எனவே, மோசமான கட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். தயவுசெய்து வீட்டில் தங்கியிருந்து எங்களுக்கு உதவுங்கள். இணைந்து செயல்பட்டால்தான் தொற்றுச் சங்கிலியை உடைக்க முடியும்," என்று தமது அலுவல் டுவிட்டர் பக்கத்தில் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் கேட்டுக் கொண்டுள்ளார்.
SOPகளை முறையாகக் கடைப்பிடிப்பதுடன் பொதுமக்கள் வீட்டில் இருந்து தேவையின்றி வெளியே வருவதை அறவே தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மலேசியாவில் இன்று புதிய உச்சமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
