நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ம.பி.: உன் பெயர் முஹம்மதா என கேட்டு வயதானவரை அடித்து கொன்ற பாஜக நிர்வாகி

நீமச்:

மத்திய பிரதேச மாநிலம், நீமச் மாவட்டத்தில் காணாமல் போன மனநலம் பாதித்த நபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரை அப்பகுதி பாஜக நிர்வாகி தினேஷ் குஷ்வாஹா  உன் பெயர் முஹம்மதா எனக் கேட்டு தொடர்ச்சியாக அறையும் விடியோ வெளியாகி வைரலானதால் அவர் கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலம், ரத்லாம் மாவட்டம், சர்சி கிராமத்தைச் சேர்ந்த பவர்லால் ஜெயின் என்ற அந்த மனநலம் பாதித்த நபர், ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரி கோயில் விழாவில் பங்கேற்றுவிட்டு கடந்த மே 15ஆம் தேதி ஊர் திரும்பும்போது காணாமல் போனார்.

பின்னர், ரத்லாம் மாவட்ட தலைநகரிலிருந்து 38 கி.மீ. ராம்புரா சாலையில் வெள்ளிக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டு உறவினர்கள் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டனர்.

இதையடுத்து, பவர்லால் ஜெயினின் கன்னத்தில் ஒரு நபர் உன் பெயர் முகமதா எனக் கேட்டு ஆதார் கார்டை காண்பி எனத் தொடர்ந்து தாக்கும் விடியோ இணையத்தில் வெளியானது அவருடைய குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இந்த விடியோ அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் அவரை கன்னத்தில் அறையும் நபர் பாஜக நிர்வாகி தினேஷ் குஷ்வாஹா என்பது அடையாளம் தெரியவந்துள்ளது.

அவரும், விடியோ பதிவு செய்த நபரும் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, பின்னர் தினேஷ் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில செயலர் ரஜ்னீஷ் அகர்வால் கூறுகையில், அந்த தாக்குதல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. சட்டத்தின் ஆட்சி மீது பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset