நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவுக்கு வர்த்தக ரீதியில் கடத்தப்படும் மலேசியப் பறவைகள்; பாடும் பறவைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல்

பினாங்கு:

நீண்ட காலத்திற்கு பிறகு  மலேசியாவின் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டு விட்டதால், மலேசிய காடுகளில் சுதந்திரமாக வாழ்கின்ற பாடும் பறவைகளுக்கு ஆபத்து வராமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திறக்கப்பட்ட எல்லைகள் நிச்சயமாக வேட்டையாடுபவர்களுக்கு மலேசியக் காடுகளுக்கு மீண்டும் சென்று நமது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு தூண்டி விடும் என எச்சரிக்கை விடுத்தார் முஹைதீன் அப்துல் காதர்.
 
இதன் காரணமாக அழிந்து வரும் வனவிலங்குகள் குறிப்பாக நமது பாடல் பறவைகளுக்கு அழிவை ஏற்படுத்தலாம் என அவர் கோடி காட்டினார்.
 
மைனா, ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும், குறிப்பாக இந்தோனேசியாவில் பரவலாக வாழும் ஒரு பறவை  இனமாகும்.

ஆபத்தில் உள்ள மற்ற பறவையான ஓரியண்டல் மாக்பி ராபின்கள்கூட சமீபகாலமாக அழிந்து வருகின்றன.
 
இந்தோனேசிய பறவை இனங்கள் அவற்றின் சொந்த வரம்பிலிருந்து மறைந்து வருகின்றன, எனவே மலேசியாவில் இந்த பாடும் பறவைகளை வெளிநாடுகளுக்கு குறிப்பாக இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக முஹைதீன் கூறினார்.

 இதனால்தான் இந்த பறவைகளை இங்கே வேட்டையாடுகின்றனர்.

இந்தப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் கடத்தப்படுவது இந்தோனேசியாவில் பரவி வரும் பறவை வணிகத்தை எடுத்துக்காட்டுகிறது. 

அங்குள்ள கடத்தல்காரர்கள் காட்டுப் பறவைகள் உட்பட 7,000 க்கும் மேற்பட்ட பறவைகளை சுமத்ராவிலிருந்து ஜாவாவுக்கு விமானம் மூலம் அனுப்பிகொண்டுருக்கிறர்கள். இது நாட்டின் பலவீனத்தை நிரூபிக்கிறது என்றார் முஹைதீன்.

5 popular songbirds that are trapped in Malaysia for the songbird trade |  The Star

பலவகையான பாடும் பறவைகள் மட்டுமே எல்லை நாடுகளில் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

சட்டவிரோத செல்லப்பிராணி வர்த்தகத்தின் பலியாக, இந்த பறவைகள் தங்கள் இயற்கை வாழ்விடங்களில் இருந்து கொடூரமாக பிடிக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

இந்தப் பறவைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன, மேலும் அவை மன அழுத்தத்தின் விளைவாக பிடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இறக்கின்றன.

 எனவே, பாடும் பறவைகளின் வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் இது.

வேட்டையாடுபவர்கள் மற்றும் பிரபல வர்த்தகர்களுக்கு எதிராக அமலாக்கத்தை அரச அதிகரிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை விடுக்க விரும்புகிறது.

திருத்தப்பட்ட வனவிலங்கு சட்டம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைமுறைக்கு வரலாம், இச் சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்க அனுமதிக்கிறது, ஆனால், அமலாக்கப்படாவிட்டால், வேட்டையாடுபவர்கள்  எளிதாக தண்டனையில் இருந்து தப்பித்துவிடுவார்கள்.

பறவைகள் உட்பட பிற உயிர்களை மதிப்பது மற்றும் சுதந்திரமாக இருப்பதற்கான அவற்றின் உரிமை குறித்தும் மக்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.

இதற்கான தீர்வு பறவைகளின் நன்மைகளையும் அவை நம்மோடு வாழ்வதால் உண்டாகும் நன்மைகளையும் கிராமப்புற மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என முஹைதீன் அப்துல் காதர் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset