நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சித்தியவான் மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை: 15 பிரிவுகளில் சிறந்த மாணவர்கள் கௌரவிப்பு

சசித்தியவான்:

பேரா, சித்தியவானில் 
அமைந்துள்ள மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டுக்கான பட்டமளிப்பும் பரிசளிப்பு விழாவும் கோலாகலத்துடனும் நடைபெற்றது.

தற்போது 410 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பள்ளியில், 28 ஆசிரியர்கள் கல்வி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் திறமை, உழைப்பு மற்றும் பல்துறை சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இம்முறை 15 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த 15 பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் மாரியம்மாள் கிருஷ்ணன் தெரிவித்தார். 

இதன் மூலம் மாணவர்களிடையே மேலும் உற்சாகமும், போட்டித்தன்மையும் உருவாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இவ்வாண்டில் புதிதாக ஐந்து சுழற்கிண்ணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

இந்நிகழ்வு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னெடுப்பிலும், பள்ளி மேலாளர் வாரியத்தின் ஆதரவுடனும் சிறப்பாக நடத்தப்பட்டதாக அவர் கூறினார். 

விழா வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக செயல்பட்ட அனைவருக்கும் பள்ளி சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, 15 பிரிவுகளில் மாணவர்களின் அடைவுநிலையை மதிப்பீடு செய்து பரிசுகள் வழங்கப்பட்டதாக பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கணேஷ் மனோகரன் தெரிவித்தார். 

கல்வியில் சிறந்த அடைவுநிலை, நம்பிக்கை ஒளிர் விருது, பாலர்பள்ளி விருது, சிறந்த சேவை விருது, தனித்தன்மை விருது, சிலம்பராணி விருது, சீருடை இயக்க விருது, கால்பந்து நட்சத்திர விருது, விளையாட்டு அருந்தகை விருது, இணைப்பாடத்திற்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் மாணவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset