நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: பிரிமாஸ் நம்பிக்கை

கோலாலம்பூர்:

மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பொறுப்பேற்றுள்ளதால் அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஷ் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இவ்வேளையில் பிரிமாஸ் சார்பில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லை என்ற மனக்குறை நீண்ட நாளாக இருந்து வந்தது.

இதற்கும் தற்போது தீர்வுக் காணப்பட்டுள்ளது. இதனால் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில் மனிதவள அமைச்சரை பிரிமாஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் போது உனவகத் துறையில் உள்ள அந்நிய தொழிலாளர் பிரச்சினை குறித்து அவரிடம் எடுத்துக் கூறப்பட்டது.

ஆகக் கடைசியாக உணவகத் துறைக்கு கடந்த 2022ஆம் ஆண்டு அந்நிய தொழிலாளர் அனுமதி வழங்கப்பட்டது.

அதன் பின் அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் மாற்று அந்நிய தொழிலாளர்களுக்கான செயல் முறைகளும் கடுமையாக உள்ளது.

ஆக இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் அமைச்சர் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்று டத்தோ சுரேஷ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்












தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset