நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வள்ளுவர் மறை வைரமுத்து உரை எனும் நூல் திருக்குறளுக்கு புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

வள்ளுவர் மறை வைரமுத்து உரை எனும் நூல் திருக்குறளுக்கு புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது என்று மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

"வள்ளுவர் மறை வைரமுத்து உரை" எனும் கவிப்பேரரசு வைரமுத்து   எழுதிய திருக்குறளுக்கான தனித்துவமான ஆழமான உரை நூலை இன்று அதிகாரப்பூர்வமாக மலேசியாவில் வெளியீடு செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. 

பழமையான சொற்களை மட்டும் விளக்காமல், இன்றைய சமூக வாழ்வோடு குறளை இணைத்து உரையாக்கியுள்ளார் கவிப்பேரரசு.
 
இலக்கியச் சுவை, தத்துவ ஆழம், சமூகப் பொறுப்பு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த நூல்தான் திருக்குறள். 

ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கைக்கான வழிகாட்டி. மதம், இனம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்தும் பார்வைதான் திருக்குறள் என்பதைக் காட்டும் முயற்சி இது.

வள்ளுவர் ஒரு கவிஞர், சமூக சிந்தனையாளர் என்பதைத் தாண்டி ஒரு தலைவர் என்ற நிலையில் உயர்த்திப் பிடிக்க வேண்டியவர் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

இவ்விழாவில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து மலேசியா தமிழுக்கு இரண்டாம் தாய் வீடு.

இந்த நாட்டில் நூல்களை வெளியிடுவது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.

குறிப்பாக ஒவ்வொரு முறையும் தமிழுக்காக விழா எடுக்கும் டத்தோஸ்ரீ சரவணனின் முயற்சி பாராட்டுக்குரியது என்று அவருக்கு கூறினார்.

முன்னதாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தலைவர் பெ ராஜேந்திரன், 

மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர் திருமாவளவன் வாழ்த்துரை வழங்கினார்கள்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset