நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் குடியிருப்பில் 44 வீடுகளில் வசிப்பவர்கள் சாலை அமைக்க ஒப்புக் கொண்டனர்: அமிரூடின் ஷாரி

ஷாஆலம்:

பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் குடியிருப்பில்
44 வீடுகளில் வசிப்பவர்கள் சாலை அமைக்க ஒப்புக் கொண்டனர்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் வீடுகளை காலி செய்யவும் சாலை சீரமைப்பு பணிகளுக்கும் ஒப்புக்  கொண்டுள்ளனர்.

மேலும் அவர்கள் குடியிருப்பில் 2.5 கி.மீ சாலையை உள்ளடக்கிய பெரிய கட்டுமானப் பணிகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த வாரம் தாம் தலைமை தாங்கிய கோம்பாக் மாவட்ட அலுவலகம், தொடர்புடைய நிறுவனங்களுடன் குடியிருப்பாளர்களுடன்  நிச்சயதார்த்த அமர்வைத் தொடர்ந்து இதனை நான் உறுதி செய்கிறேன்.

சிலாங்கூர் அரசாங்கம் இப்பகுதியை மிகவும் ஒழுங்கான முறையில் அபிவிருத்தி செய்ய விரும்புவதை விளக்கவும்,

முயற்சி தொடங்கப்படுவதற்கு முன்பு குடியிருப்பாளர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்கவும் இந்த அமர்வு நடைபெற்றது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset