நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்: டத்தோ மோசின்

கோலாலம்பூர்:

உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்.

பிரெஸ்மா தலைவர் டத்தோ மோசின் இதனை தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இவ்வேளையில் பிரெஸ்மா சார்பில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லை என்ற மனக்குறை நீண்ட நாளாக இருந்து வந்தது.

இதற்கும் தற்போது தீர்வுக் காணப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்திய சமுதாயத்தின் குரலாக அமைச்சரவையில் ஒலிப்பார் என நாங்கள் நம்புகிறோம்.

மேலும் டத்தோஸ்ரீ ரமணனின் இந்த நியமனம் உணவகத் துறைகளுக்கு புதிய நம்பிக்கையை தருகிறது.

அந்நியத் தொழிலாளர்கள் உட்பட பல பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மாற்று அந்நியத் தொழிலாளர்களுக்கான காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது.

இந்த காலக் கெடுவை அவர் நீட்டிக்க வேண்டும்.

இதற்கு எல்லாம் டத்தோஸ்ரீ ரமணன் தீர்வு காண்பார் என தாம் நம்புவதாக டத்தோ மோசின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset