நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026இல் பூமிபுத்ரா, இந்திய தொழில்முனைவோருக்கான நிதி அதிகரிக்கப்படும்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

2026இல் பூமிபுத்ரா, இந்திய தொழில்முனைவோருக்கான நிதி மேலும் அதிகரிக்கப்படும்.

தொழில் முனைவோர் மேம்பாரு கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

தெக்குன் கீழ் பூமிபுத்ரா நிதி நிதி இந்த ஆண்டு 300 மில்லியனில் இருந்து 2026ஆம் ஆண்டில் 500 மில்லியனாக உயர்த்தப்படும்.

இது சிறு, குறு, நடுத்தர பூமிபுத்ரா நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான ஒரு கொள்கையாகும.

மேலும் இந்திய சமூக தொழில்முனைவோருக்கான ஸ்பூமி திட்டத்தின் மூலம் இந்திய தொழில்முனைவோருக்கான நிதி 2026 ஆம் ஆண்டில் 30 மில்லியனில் இருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.

அதே நேரத்தில் சீன சமூகத்திற்கான 50 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள புதிய நிதித் திட்டம் 2026 ஜனவரியில் தொடங்கப்படும்.

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின்  உயர் நிர்வாகத்தின் விளக்க அமர்வை இன்று இங்கு தலைமை தாங்கிய முதல் நாளில் கேட்ட பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset