நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உட்லண்ட்ஸ், துவாஸ் சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல்: 3 மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை

ஜோகூர் பாரு:

விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ் (Woodlands), துவாஸ் (Tuas) குடிநுழைவு, சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் அதனைத் தெரிவித்தது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதி பள்ளி விடுமுறை நவம்பர் 21ஆம் தேதி தொடங்கியது.

அன்று மட்டும் 555,000க்கும் அதிகமான பயணிகள் உட்லண்ட்ஸ், துவாஸ் பகுதிகளைக் கடந்து மலேசியாவுக்கு வந்துள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குப் புறப்பட்டவர்கள் 3 மணி நேரம் வரை சாலையில் காத்திருக்க நேரிட்டது.

நவம்பர் 21ஆம் தேதிக்கும் 27ஆம் தேதிக்கும் இடையே மொத்தம் 3.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் மின்-சிகரெட் கடத்தலுக்கு எதிரான சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

அதனால் சோதனைச் சாவடிகளைக் கடக்கக் கூடுதல் நேரமாகலாம்.

பயணிகள் சோதனைச் சாவடியில் போக்குவரத்து நிலவரத்தைத் தெரிந்துகொண்டு அதன் பிறகு பயணத்தைத் தொடங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நேரத்தின்போது பயணிகள் பேருந்தைப் பயன்படுத்தலாம் என்றது ஆணையம்.

ஆதாரம்: Media corp

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset