நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்

புத்ராஜெயா:

மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நேற்று மாட்சிமை தங்கிய மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

இந்நிலையில் மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பணியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

சரியாக காலை 9 மணிக்கு பணியை தொடங்கிய அவர், அதன் பின் மனிதவள அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு கூட்டத்தை அவர் நடத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset