நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிந்திக்கும் ஆற்றல்மிக்கத் தலைமுறையை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு: டத்தோஸ்ரீ எம். சரவணன்

ஷா ஆலம்:

சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 500 ஆசிரியர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. 

சிலாங்கூர் மாநில ம.இ.கா இளைஞர் பகுதி ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் பேசியதாவது:

ஆசிரியர்கள், வருங்கால சமுதாயத்தை கட்டி எழுப்பும் அர்ப்பணிப்பாளர்கள். மேலும், மாணவ சமுதாயத்தை வடிவமைக்கும் சேவையாளர்கள்.

அடுத்த தலைமுறையை சிந்திக்கும் ஆற்றல்மிக்கத் தலைமுறையாக உருவாக்கும் கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. 

May be an image of 1 person, standing and indoor

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். தொழில் புரட்சி 4.0க்கு ஏற்ப அடுத்த தலைமுறையை உருவாக்குவோம். 

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்
அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று

என்று ஆசிரியர்களின் உயர்வையும் அவர்களின் பொறுப்புகள் குறித்தும் தனது உரையில் அமைச்சர் சிலாகித்துப் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset