நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில அரசின் திறந்த இல்ல உபசரிப்பு ரத்து

சிரம்பான்: 

செலவு குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கூட்டாட்சி முடிவுக்கு இணங்க, நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் இந்த ஆண்டுக்கான தனது ஈகைத் திருநாள் திறந்த இல்ல உபசரிப்பை ரத்து செய்துள்ளது. 

ஏப்ரல் 4 அன்று பண்டார் ஸ்ரீ ஜெம்போலில் நடைபெறவிருந்த நிகழ்வும், ஏப்ரல் 12 அன்று நடைபெறவிருந்த தேசிய அளவிலான மடானி அய்டில்ஃபித்ரி கொண்டாட்டமும் நடைபெறாது என்று மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமினுதீன் ஹருன் கூறினார். 

இந்த முடிவு மாநிலத்தின் நிதியை நிர்வகிப்பதில் ஒரு விவேகமான அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.

 "இருப்பினும், மாநில அரசாங்கம் துறை அல்லது முகமை மட்டத்தில் கொண்டாட்டங்களைத் தடுக்கவில்லை, ஆனால் அவற்றை மிதமான அளவில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று அவர் இன்று இங்கு சிகாமட்டில் நடைபெற்ற மந்தாய் ரயா 2026 நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மேற்கு ஆசியாவில் உள்ள மோதல்களுடன் தொடர்புடைய உலகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு அனைத்து அமைச்சகங்கள், முகமைகள், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (GLCs) ஈகைப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்தாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக அறிவித்திருந்தார். 

அமைச்சரவையால் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த முடிவு, அரசாங்கம் செலவினங்களில் மிதமான, கவனமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளது என்ற தெளிவான செய்தியை அனுப்பும் நோக்கம் கொண்டது என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset