நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய வாழ் தெலுங்கு மக்கள் அனைவருக்கும் 'உகாதி சுபகாஞ்சலு': டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மலேசியாவில்  வாழ்கின்ற தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தெலுங்குப் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகா, எப்பொழுதும் தெலுங்கு சமுதாயத்தின் வளர்ச்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு செயல்படுவதை நாடு அறியும்; அதைப்போல தெலுங்கு மக்களும் மஇகாவின் நெடிய பயணத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பும்  உறுதுணையும் வழங்கி வருவது தன்னை பெருமை கொள்ளச் செய்கிறது.

உகாதி அல்லது 'யுகாதி என்று அழைக்கப்படுகிற புத்தாண்டு தெலுங்கு மக்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகையாகும்; இது ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்திற்கு சற்று முன், பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்த நாள்  கொண்டாடப்படுகிறது. 

நிகழும் 2026-ஆம் ஆண்டுக்கான உகாதி, மார்ச் 19ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் மலேசியாவில் வாழ்கின்ற குறிப்பாக மலேசியாவின் பாரம்பரிய அரசியல் இயக்கமான மஇகா-வின்  உறுப்பினர்கள் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த இனிய நாளில் வாழ்த்து சொல்லும் அதேவேளை, தெலுங்கு சமுதாயத்தினர் எல்லா நலமும் வளமும் பெற்று மலேசிய தேசிய நீரோட்டத்தில் மஇகாவின் வழி தங்களின் பங்களிப்பை அளித்து தாங்களும் உயர்ந்து வாழ்வாங்குவாழ வாழ்த்துவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள உகாதி புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset