நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவராக டத்தோ சரவணக்குமார் நியமனம்

பெட்டாலிங்ஜெயா:

நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பெர்செகுது பிரிவின் தலைவராக டத்தோ வீ. சரவணக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெர்சத்து கட்சியின் சயாப் பெர்செகுது பிரிவின் கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்பிரிவின் இடைக்காலத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்ஜீவன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முக்கிய அங்கமாக மாநில பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில் டத்தோ சரவணக்குமார் நெகிரி செம்பிலான் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் நீலாய் வட்டார மக்களுக்கும் கட்சிக்கும் உரிய சேவைகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு நெகிரி செம்பிலான் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடைய எனக்கு வழங்கப்பட்டுள்ள இப்புதிய பொறுப்பை ஒரு கடமையாக பார்க்கிறேன்.

இவ்வேளையில்  பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின், சயாப் பிரிவின் இடைக்காலத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்ஜீவன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பெர்சத்து சயாப் பெர்செகுது பிரிவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் திட்டங்களையும் மேற்கொள்வேன் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset