நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்னணு கழிவு கடத்தலை தடுக்க அமைச்சு சிறப்பு அமலாக்க பணிக்குழு அமல்படுத்துகிறது

கோலாலம்பூர்: 

சுற்றுச்சூழல் குற்றங்கள், குறிப்பாக சட்டவிரோத மின்னணு கழிவு இறக்குமதியைத் தடுக்கும் நோக்கில் இயற்கை வள, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் கீழ் சிறப்பு அமலாக்க பணிக்குழுவை அரசு அமைத்துள்ளது. இது அமைச்சகத்திற்குட்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் முயற்சியாகும்.

இந்த குழு, துறைமுகங்களில் குவிந்து கிடக்கும் மின்னணு கழிவு கொள்கலன்கள், சட்டவிரோத தொழிற்சாலைகள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், அமலாக்க நடைமுறைகளில் உள்ள சவால்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 

மேலும், சட்டவிரோத கழிவுகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகள், கொள்கை திருத்தங்கள், புதிய உத்திகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கிள்ளான் துறைமுகத்தில் சுற்றுச்சூழல் துறையின் கிளை அலுவலகம் அமைப்பது போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த பணிக்குழு மாதந்தோறும் அல்லது தேவைக்கேற்ப கூடிக் கூட்டங்களை நடத்தி, அமலாக்க நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு அரசுத் துறைகளும் இணைந்து செயல்படுகின்றன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset