நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கராத்தே போட்டியில் 36 தங்கம்: இலக்கை அடைந்த மலேசியா

ஹனோய்: 

கராத்தே போட்டியில் மலேசிய அணி தங்கம் வென்தன் மூலம் 36 தங்கப்பதக்கம் என்ற இலக்கையும் மலேசிய அணி அடைந்துள்ளது.

ஆண்களுக்கான குழு நிலையிலான கராத்தே போட்டியில் மலேசிய அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இப்பிரிவில் மலேசியாவை பிரதிநித்து ஆர். சர்மேந்திரன், எஸ். பிரேம்குமார், எச். சூர்ய சங்கர், எஸ், கிரிஜேஸ்வரன், அரிப் அபிபூடின், வி. குகன், ஜி. கதிஸ் ஆகியோர் சிறப்பான திறனை வெளிப்படுத்திய நாட்டிற்கு தங்கப்பதக்கத்தை வென்று தந்தனர்.

இது மலேசிய அணி வென்ற 36ஆவது தங்கப்பதக்கமாகும்.

இப் பதக்கத்தின் மூலம் சீ விளையாட்டுப் போட்டியில் 36 தங்கப்பதக்கம் என்ற இலக்கையும் மலேசியா அடைந்துள்ளது.

இதுவரை மலேசியா 36 தங்கம், 40 வெள்ளி, 81 வெண்கலம் என்று மொத்தம்  157 பதக்கங்களை வென்று பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset