நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரொனால்டோ இல்லாமல் கடைசி கட்ட கோலால் அல் நசாரை கைப்பற்றிய வீரர்

ரியாத்:

சவுதி பு ரோ லீக் கால்பந்து போட்டியில் அல் நசர் அணி 1-0 என்ற கணக்கில் நியோம் அணியை வீழ்த்தியது. 

ரியாத்தில் அல்-அவால் பார்க் மைதானத்தில் நடந்த சவூதி புரோ லீக் போட்டியில் அல் நசர்,  நியோம் அணிகள் மோதின. 

தொடை எலும்பு காயம் காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இப் போட்டியில் விளையாடவில்லை.

இதனால் சாடியோ மனே கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

ஆனாலும் அல் நசர் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதியில் கோல் விழாத நிலை இரண்டாம் பாதியிலும் நீடித்தது. 

எப்படியும் போட்டி டிராவில் முடிந்துவிடும் என்று அனைவரும் நினைத்த சூழலில், அல் நஸர் வீரர் மொஹம்மது சிமகன் தமது அணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

90+5வது நிமிடத்தில் அவர் கோல் அடித்தார்.

நியோம் அணியால் இதற்கு பதில் கோல் அடிக்க முடியாததால், அல் நசர் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset