நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

7 வீரர்களுக்கு 12 மாதங்கள் இடைநீக்கம்: CAS தீர்ப்பு

கோலாலம்பூர்: 

நாட்டின் ஏழு மரபுரிமை கால்பந்து வீரர்களுக்கு 12 மாத இடைநீக்கம் விதிக்கப்பட்டது என்ற தீர்ப்பை விளையாட்டு நடுவர் நீதிமன்றம் (CAS) உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், அந்த இடைநீக்கம் அதிகாரப்பூர்வ போட்டிகளுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

'Facundo Tomás Garcés Rattaro', 'Rodrigo Julián Holgado', 'Imanol Javier Machuca', 'Joao Vitor Brandao Figueiredo', 'Gabriel Felipe Arrocha', 'Jon Irazabal Iraurgui', 'Hector Alejandro Hevel Serrano' ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்ட ஏழு வீரர்களாவர்.

மலேசிய கால்பந்து சங்கம் (FAM) இணைந்து தாக்கல் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதாகவும், FAM மீது FIFA விதித்த CHF 350,000 அபராதம் தொடர்ந்தும் அமலில் இருக்கும் என்றும் CAS வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.

“தடை காலத்தில் அந்த வீரர்கள் தங்களது அணிகளுடன் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

“எனவே, அவர்களின் மேல்முறையீடு பகுதியளவில் ஏற்கப்பட்டு, விதிக்கப்பட்ட தண்டனை பகுதியளவில் திருத்தப்பட்டுள்ளது.

“போட்டிகளில் விளையாடும் தடை, 2026 மார்ச் 5 முதல் அமலுக்கு வருகிறது. 2025 செப்டம்பர் 25 முதல் 2026 ஜனவரி 26 வரை இருந்த காலம் தண்டனை காலத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

“மேலும், FAM மீது விதிக்கப்பட்ட CHF 350,000 அபராதம் நியாயமானதும் சமநிலையுடனானதும் ஆகும்,” என்று CAS தெரிவித்துள்ளது.

சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset