நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 டிசம்பருடன் ஓய்வு பெறும் நெய்மர்: சோகத்தில் ரசிகர்கள்

ரியோ:

பிரேசில் நாட்டின் கால்பந்து வீரர் நெய்மர் தனது ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்தாண்டு வரும் டிசம்பருடன் தனது கால்பந்து பயணத்தை முடித்துக்கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளார்.

பிரேசில் நாட்டிற்காக அதிக கோல்கள் (79) அடித்த வீரராக இருக்கும் நெய்மர் இந்தாண்டுடன் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

காயம் காரணமாக பல போட்டிகளைத் தவறவிட்ட நெய்மர் தற்போது தனது சிறு வயது அணியான சந்தோஷ் கிளப்பில் விளையாடி வருகிறார்.

இந்தாண்டு கால்பந்து உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்க ஆவலுடன் இருக்கும் நெய்மர் இன்னும் உடல் தகுதி பெறவில்லை என பிரேசில் அணியின் பயிற்சியாளர் கூறி இருந்தார்.

இந்நிலையில், நெய்மர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இப்போது என்னாகும் என்று தெரியவில்லை. அடுத்தாண்டு குறித்தும் தெரியாது. அநேகமாக டிசம்பர் வந்ததுடன் நான் ஓய்வு பெறுவேன் என்று நினைக்கிறேன்.
நான் இப்போதைக்கு ஒவ்வொரு ஆண்டாக வாழ்ந்து வருகிறேன்.

என்னுடைய இதயம் என்ன முடிவெடுக்கிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆண்டின் இறுதியில் என் மனது என்ன நினைக்கிறதோ அப்படிதான் நடக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset