செய்திகள் விளையாட்டு
உலக சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற அஜிசுல்ஹாஸ்னி: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாr பாராட்டு
கோலாலம்பூர்:
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற 2026 உலக தடகள சைக்கிள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தேசிய சைக்கிள் வீரர் அஜிசுல்ஹாஸ்னி அவாங் அவர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், உலக மேடையில் தொடர்ந்து மலேசியாவின் பெயரை உயர்த்தி வருவதாகக் கூறி அவரது சாதனையை பிரதமர் பாராட்டினார். மேலும் எதிர்கால போட்டிகளிலும் அஜிசுல்ஹாஸ்னி சிறந்து விளங்க பிரதமர் வாழ்த்தினார்.
பெர்த் ஸ்பீட்ஹோம் சைக்கிள் அரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், தொடக்கத்தில் பின்னால் இருந்த அஜிசுல்ஹாஸ்னி , உலகின் முதலிட வீரரான பிரிட்டனைச் சேர்ந்த மேத்யூ ரிச்சர்ட்சன் பின்னால் நெருக்கமாக பின்தொடர்ந்து சரியான தருணத்தில் வேகமாக பாய்ந்து வெற்றியைப் பெற்றார்.
இன்று அவர் ஆண்கள் தனிநபர் வேகப்போட்டியில் தனது அடுத்த சவாலை தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 8, 2026, 9:42 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 8, 2026, 9:40 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: காலிறுதியில் அர்செனல்
March 7, 2026, 4:42 pm
உலக கோப்பையில் பங்கு பெற 'Speedy Tigers'க்கு இன்னும் வாய்ப்புள்ளது
March 7, 2026, 10:37 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 7, 2026, 10:26 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: காலிறுதியில் லிவர்பூல்
March 6, 2026, 9:54 am
2026 டிசம்பருடன் ஓய்வு பெறும் நெய்மர்: சோகத்தில் ரசிகர்கள்
March 6, 2026, 9:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் தோல்வி
March 5, 2026, 8:50 pm
7 வீரர்களுக்கு 12 மாதங்கள் இடைநீக்கம்: CAS தீர்ப்பு
March 5, 2026, 2:57 pm
